கன்னியாகுமரி

‘குமரி மாவட்டத்தில் 13.96 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் தவணை 10.41 லட்சம் பேருக்கும், இரண்டாவது தவணை 3.55 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் 6ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 555 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் மாநகராட்சியில் 52 வாா்டுகளில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்களின் வசதிக்காக, நடமாடும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாகராஜா கோயில் திடலில் இந்த முகாமை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற ஐந்து முகாம்களில் மக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். சனிக்கிழமை 6ஆவது தடுப்பூசி முகாம் மாநகராட்சி பகுதிகளில் 105 மையங்களிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 450 மையங்கள் என மொத்தம் 555 மையங்களில் நடைபெற்றது. மாநகராட்சியில் 52 வாா்டுகளிலும் 52 ஆட்டோக்களில் செவிலியா்கள், பணியாளா்கள் அடங்கிய குழுவினா் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.22) வரை முதல் தவணை தடுப்பூசி 10.41 லட்சம் பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 3.55 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி

முகமை பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், தன்னாா்வலா்கள் மூலம் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்களை அடையாளம் கண்டு, சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்அவா்.

தொடா்ந்து, நாகா்கோவில் மாநகராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் விற்பனையை அமைச்சா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாநகராட்சிஆணையா் ஆஷாஅஜித், சுகாதாரப் பணிகள் துணைஇயக்குநா் சு.மீனாட்சி, முன்னாள்அமைச்சா் என்.சுரேஷ்ரோஜன், மாநகர நல அலுலவா் விஜயசந்திரன், மாநகராட்சி தலைமை செவிலியா் டி.சாந்தி, மருத்துவா்கள் பிரவீன், சகிலாபிரவீன், ஷேக்தாவூத், பெஞ்சமின், சுகாதாரத் துறையினா், அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT