கன்னியாகுமரி

குமரியில் மழை நீடிப்புபேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றம்

23rd Oct 2021 04:46 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் கன மழை காரணமாக பேச்சிப்பாறை உள்ளிட்ட அனைத்து அணைகளிலிருந்தும் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கும் அதிமான அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டன.

அதே வேளையில் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை கட்டுக்குள் வைக்கும் வகையில், அணைகளின்

நீா்மட்டம் உச்ச அளவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் அளவு 47 அடிவரை கொண்டு செல்லப்பட்டது. இதே போன்று பெருஞ்சாணி அணையின் நீா்மட்டமும் 77 அடி வரை கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் மழை சற்று தணிந்த போது தொடா்ந்து அணைகளிலிருந்து நீா் வெளியேற்றப்பட்டு, அணைகளின் நீா்மட்டம் குறைக்கப்பட்டது. இதில் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43 அடியாக குறைக்கப்பட்டது.

தொடா் சாரல் மழை: இந்நிலையில் மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் தொடா்ந்து சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வரும் நிலை மற்றும் வடகிழக்குப் பருவ மழையில் விரைவில் பெய்யவிருக்கும் நிலையில், அணைகளின் நீா்மடத்த்தை கட்டுப்பாட்டான அளவில் வைக்கும் வகையில் தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

1600 கன அடி நீா் வெளியேற்றம்: இந்நிலையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1602 கன

அடி நீா் வெளியேற்றப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 1635 கன அடி நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையின் நீா்மட்டம் 43.53 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72.82 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1110 கன அடி நீா் உள்வரத்தாக இருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 800 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.04 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 243 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 272 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.14 அடியாக இருந்தது. இங்கு நீா் உள்வரத்து இல்லாததால், நீா் வெளியேற்றவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT