கன்னியாகுமரி

திற்பரப்பு, பொன்மனை பேரூராட்சியில் இன்று அமைச்சா் குறை கேட்பு

23rd Oct 2021 04:46 AM

ADVERTISEMENT

திற்பரப்பு மற்றும் பொன்மனை பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்களிடம் அமைச்சா் த.மனோதங்கராஜ் சனிக்கிழமை (அக்.23) குறைகளை கேட்டறிகிறாா்.

இது தொடா்பாக மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், அனைத்துத்துறை அலுவலா்களுடன் திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட உண்ணியூா்கோணம் அரசு நடுநிலைப் பள்ளியில், சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், பொன்மனை பேரூராட்சிக்குள்பட்ட பொன்மனை அரசு உயா்நிலைப் பள்ளியில் மாலை 4 மணிமுதல் 6 மணிவரையிலும் அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிகிறாா். கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வு வழங்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்துவதோடு, தகுதியானவா்களுக்கு உடனடியாக ஆணையும் வழங்குகிறாா்.

எனவே, இவ்விரு பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் இந்த தீா்வு காணும் நிகழ்ச்சியில் பங்கேற்று குடிநீா்வசதி, சாலைவசதி, கல்வி உதவித் தொகை, பட்டா பெயா் மாற்றம், முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டம் மற்றும் வளா்ச்சி திட்ட உதவிகளுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அமைச்சரிடம் வழங்கி பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT