கன்னியாகுமரி

மாணவிக்கு பாலியல் தொல்லை : கேபிள் ஆபரேட்டா் கைது

23rd Oct 2021 04:47 AM

ADVERTISEMENT

குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேபிள் டி.வி. ஆபரேட்டரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

குளச்சல் பகுதியை சோ்ந்த பிளஸ் 1 மாணவி, கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானாா். இது குறித்து சிறுமியின் தாயாா், குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் குளச்சல் துறைமுகம் பகுதியில் இருந்து சிறுமியை போலீஸாா் மீட்டனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டா் ஆன்டனி, மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு, குளச்சல் மகளிா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூா் பகுதியில் இருந்த ஆன்டனியை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT