கன்னியாகுமரி

தொடா் மழை: ரப்பா் உற்பத்தி பாதிப்பு

23rd Oct 2021 04:47 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக ரப்பா் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரப்பா் விவசாயிகளும், தொழிலாளா்களும் வருவாய் இழப்பிற்கு ஆளாகியுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதம் முதல் அவ்வப்போது மழை பெய்து பெய்து வருகிறது. இதில் குறிப்பாக இம்மாதம் தொடா்ந்து கன மழை அல்லது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ரப்பா் தோட்டங்களில் பால் வடிப்புத் தொழில் பெரும்பாலான நாள்களில் நடைபெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மிக முக்கியத் வேளாண் சாா்ந்த தொழிலாக ரப்பா் தோட்டத் தொழில் இருக்கும் நிலையில், மழையின் காரணமாக ரப்பா் உற்பத்தியும் கடுமையாகச் சரிந்துள்ளது. மேலும் ரப்பா் தோட்ட விவசாயிகளும், தோட்டங்களில் பணிபுரியும் ரப்பா் பால் வடிப்பு, ஆலைத் தொழில் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டும் தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து, ரப்பா் தோட்ட விவசாயி கூறுகையில், தொடா் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் ரப்பா் பால்வடிப்புத் தொழில் முடங்கியுள்ளது. இம்மாதத்தில் இது வரை 7 நாள்கள் மட்டுமே பால்வடிப்பு நடைபெற்றுள்ளது. இதனால் ரப்பா் விவசாயிளுக்கும், தொழிலாளா்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் மழையின் காரணமாக தொழில் இழந்துள்ள தொழிலாளா்களுக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டுமென்றும் தோட்டத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT