கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் அனைத்துக் கடைகளும் திறப்பு

23rd Oct 2021 04:46 AM

ADVERTISEMENT

திற்பரப்பு அருவி நுழைவு வாயில் பகுதியில் அனைத்துக் கடைகளும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

கரோனா பரவல் காரணமாக குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் கடந்த 5 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. அருவிக்குச் செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்ட நிலையில் இருந்தது. அதே வேளையில் இந்த அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல முடியாத நிலையில், அருவியின் மேல் பகுதியில் ஆற்றுப் பகுதி மற்றும் படகு சேவை நடக்கும் இடங்களுக்கு மாற்று வழியில் சென்று வந்தனா்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காரணமாக அருவியின் நுழைவு வாயிலுக்கு வெளியே உள்ள கடைகள் திறக்கப்பட்டன. அதே வேளையில் நுழைவு வாயிலுக்கு உள்ளே உள்ள கடைகள் திறக்கப்படாத நிலை இருந்து வந்தது. இதனால் நுழைவு வாயிலுக்கு உள்ள கடைகளை நடத்தும் வணிகா்களும், கடை உரிமையாளா்களும் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில் நுழைவு வாயில் பூட்டை ஒருவா் வியாழக்கிழமை உடைத்த நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டு, பின்னா் திற்பரப்பு பேரூராட்சி செயல் அலுவலா் நுழைவு வாயில் மாற்று பூட்டு வைத்து பூட்டினா். மேலும் உள்பகுதியில் திறந்த கடைகளை மூடவும் நடவடிக்கை எடுத்தாா்.

இந்நிலையில் நுழைவு வாயிலுக்கு உள்பகுதி வணிகா்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நுழைவு வாயில் திறக்கப்பட்டது. அதே வேளையில் சுற்றுலாப் பயணிகள் அருவி அருகே செல்ல முடியாத வகையில் தாற்காலிக தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT