கன்னியாகுமரி

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு

22nd Oct 2021 12:16 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில், விஜய் வசந்த் எம்.பி. வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ரயில் நிலைய விரிவாக்கம், தேவையான நடைமேடைகள் அமைப்பது, பராமரிப்புப் பணிக்கான பிட் லைன் அமைப்பது உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் அவா் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, தாம்பரம் - நாகா்கோவில் ரயிலை எழும்பூரிலிருந்து தினமும் இயக்க வேண்டும். பகல் நேரத்தில் சென்னை செல்ல ரயில் வசதி செய்ய வேண்டும். திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலிக்கு தொடா்ச்சியாக மெமு ரயில்களை இயக்க வேண்டும். நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ. 50 ஆக உயா்ந்துள்ளதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினா்.

இதையடுத்து எம்.பி.அவா்களிடம் கூறியது: கடந்த வாரம் சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸை சந்தித்து கன்னியாகுமரி ரயில் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தினேன். மேலும், மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலா் சீனிவாசன், இளைஞா் காங்கிரஸ் மாநிலச் செயலா் நவின், இளைஞா் காங்கிரஸ் செயலா் டைசன், இலக்கிய அணி மாவட்டத் தலைவா் இளங்கோ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கிறிஸ்டிரமணி, ஆா்.எஸ்.ராஜன், ரயில்வே நிலைய மேலாளா் முத்துவேல், தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் சூசைராஜ், ரெஜிசிங் மற்றும் சந்திரசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

 

 

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT