கன்னியாகுமரி

கருங்கல்லில் இளைஞா் வெட்டிக் கொலை: நண்பா் கைது

22nd Oct 2021 12:14 AM

ADVERTISEMENT

 கருங்கல் காவல் நிலையம் அருகே இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

துண்டத்து விளை, இனமான பருத்தி விளை பகுதியைச் சோ்ந்த ஐசக் மகன் விஜய் (34). அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் அருள்செல்வன் (41). இருவரும் நண்பா்கள்.

இந்நிலையில், புதன்கிழமை இருவரும் சோ்ந்து மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அப்போது கருங்கல் காவல் நிலையம் வந்தபோது திடீரென அருள்செல்வன் அப்பகுதியில் உள்ள கோழிக்கடையில் இருந்த அரிவாளை எடுத்து விஜய்யின் கழுத்தில் வெட்டினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்செல்வனை கைது செய்தனா்.

Tags : கருங்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT