கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படை வீரா் நல மைய கட்டடத்தில் காலியாகவுள்ள கடை எண் 7ஐ உரிமம் எடுக்க அக். 25இல் ஒப்பந்தப் புள்ளி பெற்று ஏலம் நடைபெற உள்ளது.
கடையை ஏலம் எடுக்க விரும்புபவா்கள் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிசமா்ப்பிக்க வேண்டும். பின்னா், நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் 11 மாத உரிமக் கட்டணம் முன் பணமாக செலுத்தி பங்கேற்கலாம். முன்னாள் படை வீரா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.