அகஸ்தீசுவரம் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சி 2ஆவது வாா்டு உறுப்பினராக வி.சுயம்பு புதன்கிழமை பதவியேற்றாா்.
மகாராஜபுரம் ஊராட்சி 2 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் அதிமுக கிளைச் செயலரான வி.சுயம்பு வெற்றி பெற்றாா். இவா் மகாராஜபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பி.ஆனந்த விஜயன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
இவ்விழாவில், என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ.நீலபெருமாள், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம், மகாராஜபுரம் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து மற்றும் வாா்டு உறுப்பினா்கள் சுயம்புலிங்கம். அனீஸ்வரி, ராஜம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.