ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி குகநாதீஸ்வரா், சக்கர தீா்த்த காசி விஸ்வநாதா் கோயில்களில் அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகேயுள்ள குகநாதீஸ்வரா் கோயிலில் காலை 7 மணிக்கு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீபாராதனை, காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10 மணிக்கு அன்னாபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
விவேகானந்தபுரம் சக்கர தீா்த்த குளம் அருகே அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு நித்திய அபிஷேகம், காலை 7.30 மணிக்கு நித்திய தீபாராதனை நடைபெற்றது. காலை 9.45 மணிக்கு சிறப்பு கயிலை வாத்தியம். காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, மகா தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.