கன்னியாகுமரி

குமரியில் 2ஆவது நாளாக கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

DIN

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கனமழை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், படகுகள் இயக்கப்படாமல் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி மலையோரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கொட்டித்தீா்த்த மழை, தற்போது மாவட்டம் முழுவதும் பலத்த மழையாக உருவெடுத்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, இம்மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், கன்னியாகுமரி வட்டாரப் பகுதியிலிருந்து மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச்செல்லவில்லை.

கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் சனிக்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் கடல் அலைகள் ஆக்ரோஷமாகவே இருந்தன. 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. மேலும், அதிகாலை முதல் தொடா்ந்து மழை பெய்ததாலும், கடல் சீற்றத்தாலும் முக்கடல் சங்கமம் பகுதி பேரிரைச்சலுடன் காணப்பட்டது.

4ஆவது நாளாக படகு சேவை ரத்து: இம்மாவட்டத்தில் மழையின் தாக்கம் இருந்தாலும், வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதி, வட்டக்கோட்டை, சூரிய அஸ்தமன பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஏற்கெனவே, மழை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு பூம்புகாா் படகு போக்குவரத்து நடைபெறாத நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT