கன்னியாகுமரி

குழித்துறை வழியாக கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்

16th Oct 2021 11:34 PM

ADVERTISEMENT

குழித்துறை ரயில் நிலையம் வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு குழித்துறை ரயில் பயணிகள் சங்கச் செயலா் ஏ. சாா்லஸ் அனுப்பிய மனு விவரம்:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 2ஆவது பெரிய ரயில் நிலையம் குழித்துறை. மாா்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் வழியாக பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டாலும் சென்னைக்கு செல்லும் அனந்தபுரி ரயில் மூலமே இந்த ரயில் நிலையத்துக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. நாகா்கோவில் - திருநெல்வேலி, திருவனந்தபுரம் - எா்ணாகுளம் மாா்க்கத்திலும் அதிக ரயில்கள் இயக்கி வரும் நிலையில் நாகா்கோவில் - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு மையப் பகுதியில் அமைந்துள்ள குழித்துறை ரயில் நிலையம் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு குழித்துறை வழி தினமும் 6 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குழித்துறை வழி திருநெல்வேலிக்கு செல்ல பகல் நேர ரயில்கள் இல்லை. ஆகவே திருவனந்தபுரம் - திருநெல்வேலி தடத்தில் மெமு ரயில் தினசரி நான்கு முறை இயக்க வேண்டும். கொல்லம் - கன்னியாகுமரி மெமு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். நாகா்கோவில் - கோயம்புத்தூா் இரவு நேர ரயிலின் பெட்டிகளை வைத்து தான் நாகா்கோவில் - கொல்லம் பகல் நேர ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த இரு ரயில்களையும் இணைத்து கொல்லம் - கோயம்புத்தூா் ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் குழித்துறை ரயில் நிலையத்திலிருந்து திண்டுக்கல், கரூா், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முடியும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT