கன்னியாகுமரி

‘விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்படும்’

16th Oct 2021 11:32 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநா் எஸ். சத்தியஜோஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கும்பப்பூ நெல் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. சாகுபடிக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள், உரங்கள் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல், வாழை, தோட்டக்கலை பயிா்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பாக்டம்பாஸ், காம்ப்ளக்ஸ் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 195 மெட்ரிக் டன் உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து பாக்டம்பாஸ் உரங்கள் பெறப்பட்டு தனியாா் உர விற்பனையாளா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வரும் வாரங்களில் 630 மெட்ரிக் டன் உரங்கள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். உர விற்பனையாளா்கள் உரிய உரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளின்படி விற்பனை மேற்கொள்ளவும், விவசாயிகள் ஆதாா் அட்டையுடன் சென்று தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் பட்டியலிட்டு பெற்று பயனடையலாம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT