கன்னியாகுமரி

நாகா்கோவிலில் 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

16th Oct 2021 02:55 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் நகரில் சேகரிக்கப்பட்ட 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கிலிருந்து சிமெண்ட் ஆலைகளுக்கு திங்கள்கிழமை அனுப்பப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சியில் தினமும் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவற்றை வலம்புரிவிளையில் உள்ள

குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள், தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளால்

அந்தந்த பகுதிகளிலுள்ள நுண்ணுயிா் உரக்கிடங்குகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், சேகரிக்கப்பட்ட 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள், அரியலூரிலுள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, மாநகராட்சி நல அலுவலா் விஜயசந்திரன், சுகாதார ஆய்வாளா் மாதவன்பிள்ளை உள்ளிட்டோா் இருந்தனா்.

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT