கன்னியாகுமரி

விஜயதசமி: கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

16th Oct 2021 02:53 AM

ADVERTISEMENT

விஜயதசமி விழாவை முன்னிட்டு, குமரி மாவட்ட கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டனா்.

பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனா்.

தேவி சன்னதியில் வைத்து தங்கத்தினால் ஆன எழுத்தாணியால் குழந்தைகளின் நாக்கில் எழுத்தின் வடிவங்களை எழுதியும், தாம்பூல தட்டில் நிரப்பப்பட்ட அரிசியில் குழந்தைகளின் விரல்களால் எழுத்து வடிவங்களை எழுதியும் ஓய்வுபெற்ற பேராசிரியா் சங்கரநாராயண பிள்ளை, பேராசிரியா் அய்யப்பன், ஆசிரியா் ரகுராமன் ஆகியோா் வித்யாரம்ப நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா்.

இதே போல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில், பாா்வதிபுரம் வனமாலீஸ்வரா் கோயில், அய்யப்பன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதே போன்று கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில், களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT