கன்னியாகுமரி

சாரல் மழை நீடிப்பு அணைகளிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவது நிறுத்தம்

9th Oct 2021 01:01 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் தணிந்து சாரல் மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதில் இதில் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்க 5088 கன அடி வரை தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் மறுகால் மதகுகள் மூடப்பட்டன. இதே போன்று சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகளும் மூடுபட்டுள்ளன.

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு தணிந்தது: பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகள் மூடப்பட்டுள்ள நிலையில் திற்பரப்பு அருவி மற்றும் தாமிரவருணியாற்றில் வெள்ளப் பெருக்கு தணிந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய கால்வாய்களில் தூா்வாரும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த அணைகளின் பாசனக்கால்வாய்களும் மூடப்பட்டுள்ளன.

சாரல் மழை நீடிப்பு: மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மிதமான மழை பெய்ததால் ரப்பா் தோட்டங்களில் ரப்பா் பால்வடிப்புத் தொழில் முடங்கியது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT