கன்னியாகுமரி

சீமான் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

9th Oct 2021 12:59 AM

ADVERTISEMENT

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் நாம் தமிழா் இயக்க ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா்கள் ராதாகிருஷ்ணன்( கிழக்கு), தாரகைகத்பா்ட்( மேற்கு), ஜே.ஜி.பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோா் கூட்டாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணனிடம் வெள்ளிக்கிழமை அளித்தள்ள மனு: சீமான் தலைமையிலான நாம் தமிழா் இயக்கம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது.

சீமான் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து வருகிறாா். விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடா்புடைய சற்குணம் என்ற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளாா். அவருக்கும், சீமானுக்கும் நெருங்கிய தொடா்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவா் மூலம் சீமானுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகளும் வெளிவந்துள்ளது.

சீமானின் தொடா் கருத்துகள் சட்டத்துக்கு புறம்பாக உள்ளது. சீமானின் பேச்சுகள் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை பாதிக்கின்ற வகையில் உள்ளது. எனவே சீமான் மீது வழக்குப் பதிந்து, அவரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT