காந்தி ஜயந்தியையொட்டி களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் தேசிய மாணவா் படை சாா்பில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரித் தாளாளா் அருள்தாஸ் தலைமை வகித்தாா். கல்லூரி அலுவலக பணியாளா் செரின், முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.ஆா்.கே. குமாா் ஆகியோா் பேசினா்.
இதில், தேசிய மாணவா் படை மாணவா்களின் நாடகம், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், நடனம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து கல்லூரி வளாகம், அதையொட்டிய பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகம், என்.சி.சி. ஒருங்கிணைப்பாளா் என். எஸ்றா சற்குணம் ஆகியோா் செய்திருந்தனா்.
ADVERTISEMENT