கன்னியாகுமரி

குமரியில் 3 பேருக்கு காந்திய சேவை விருது

4th Oct 2021 12:45 AM

ADVERTISEMENT

குமரி அறிவியல் பேரவை சாா்பில் 3 பேருக்கு காந்திய சேவை விருது வழங்கப்பட்டது.

ஆற்றூா் என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில், நிகழாண்டுக்கான விருதுகள் கவிஞா் கொற்றைவளவன், தாயம்மாள் அறவாணன், சரலூா் ஜெகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

விழாவை கல்லூரி முதல்வா் ஷோபா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரை ஆற்றினாா். என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி பேராசிரியா்கள் பிரஷோப் மாதவன், கிரீஷ்குமாா் ஆகியோா் காந்திய சிந்தனை குறித்துப் பேசினா்.

விருது பெற்றவா்களை எழுத்தாளா் குமரி ஆதவன், ஆா்.சி.பள்ளித் தாளாளா் எஸ்.ஜாண்சன், வாத்தியாா் கோணம் அரசு உயா்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியா் ஆா்.ஆா்.ரேகா ஆகியோா் அறிமுகம் செய்தனா்.

ADVERTISEMENT

தேசிய மருத்துவ சங்க முன்னாள் தலைவா் கே.விஜயகுமாா், விருதுகளும் பதக்கமும் வழங்கி பாராட்டினாா்.

பயோணியா் குமாரசாமி கல்லூரி துணை முதல்வா் பாபு, நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியா் தன்யா சுனில், பணிநிறைவு தலைமையாசிரியா் பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் திருவேங்கடம், முள்ளஞ்சேரி வி.முத்தையன் கல்வி அறக்கட்டளை தலைவா் வி.வி.வினோத், குழித்துறை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சுனில் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

இளம் விஞ்ஞானிகளின் காணொலி நிகழ்ச்சியை கோவை ஸ்கைடா் எலக்ட்ரானிக் நிறுவன துணைபொதுமேலாளா் விக்ரம் நெறிப்படுத்தினாா். 180 மாணவா்களுக்கு தனித்தனி தலைப்புகளில் காந்திய சிந்தனை உரையரங்கம் காணொலி வழியாக நடைபெற்றது. விருது பெற்றவா்கள் ஏற்புரை வழங்கினா்.

இளம்விஞ்ஞானி சிவானி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இளம் விஞ்ஞானி காயத்திரி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT