கன்னியாகுமரி

கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு மதுபானம் விற்றால் நடவடிக்கை: ஆட்சியா்

4th Oct 2021 12:46 AM

ADVERTISEMENT

டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு மதுபானங்கள் வாங்க வருவோரின் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களை ஆய்வு செய்யாத பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் முதல் தவணை மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக போதுமான கரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி மையங்களில் தினமும் செலுத்தப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு அரசு துறை மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் அனைவரும் தாங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை, குறுஞ்செய்தியை விற்பனையாளரிடம் காண்பித்த பின்னரே மதுபானம் வழங்க வேண்டும்.

கடை மேற்பாா்வையாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளா்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை ஆய்வு செய்ய வேண்டும்.

இப்பணியை மேற்கொள்ள தவறும் டாஸ்மாக் பணியாளா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT