கன்னியாகுமரி

கரோனாவால் பெற்றோரை இழந்த 82 குழந்தைகளுக்கு ரூ.2.52 கோடி நிவாரண நிதிஆட்சியா் தகவல்

29th Nov 2021 01:28 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த 82 குழந்தைகளுக்கு ரூ.2.52 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்டஆட்சியா் மா.அரவிந்த்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கரோனா நோய்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்; மேலும், தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதற்கு அவா்களின் பாதுகாவலா்களுக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கவும், அந்த உதவித் தொகையை அந்தக் குழந்தைகள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும் எனவும் முதல்வா் முக. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதனடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 228 குழந்தைகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம், பெற்றோரில் ஒருவரை இழந்த 79 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.2.52 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஒரு அரசு குழந்தைகள் காப்பகம், 6 அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்கள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 61 குழந்தைகள் இல்லங்கள் என மொத்தம் 68 குழந்தைகள் இல்லங்களும், ஒரு தத்து மையமும் செயல்படுகின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT