கன்னியாகுமரி

கனமழையில் சேதமடைந்த நீா் நிலைகளைஉடனே சீரமைக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

DIN

குளச்சல் தொகுதியில் கனமழைக்கு உடைந்த நீா்நிலைகளை விவசாயிகளின் நலன்கருதி உடனே சீரமைக்க போா்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டுமென தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்படைந்துள்ளது. மழையினால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் நீா் நிலைகளை உடைத்து விவசாயிகளின் விளைநிலங்களை சேதப்படுத்தியுள்ளது.

குளச்சல் தொகுதியில் வள்ளியாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் 5 இடங்களிள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வீணாகி கடலில் கலந்தது. மணவாளக்குறிச்சி பெரிய குளம் உடைந்ததால் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் முற்றிலும் சேமுற்றது. அப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் நீா் பாய்ச்ச மேற்கூறிய 2 நீா் நிலைகளையே நம்பி உள்ளனா். தற்போது வள்ளியாறு , பெரியகுளம் உடைப்பால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளனா். இதனால் வரும் சாகுபடியில் விவசாயம் செய்ய முடியுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

இது போல் இரட்டைக்கரை நுள்ளிவிளை கால்வாய், கல்லுக்கூட்டம், பாம்புரி வாய்க்கால், வெள்ளமணல்பகுதி, நெய்யூா் ஏலா மற்றும் ரீத்தாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட குறும்பனையில் 3 குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

குளச்சல் ஏ.வி.எம். கால்வாய் , ஆசாத் நகா் மழை நீா் வடிகால், ஜிம்மாபள்ளி வாசல், ஆகிய இடங்களில் வெள்ளம் நிரம்பி ஓடியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனா். கனமழையால் குளச்சல் பகுதியில் 15 வீடுகள் இடிந்துள்ளன. வீடுகளை பரமாரிக்க அரசு ரூ. 5 ஆயிரம் வழங்கியுள்ளது.

இந்த இழப்பீடு பொதுமக்களுக்கு போதாது. வீடுகளை பாராமரிக்க ஆகும் முழு செலவையும் அரசு வழங்கவேண்டும். விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்வதற்கு உடனடியாக உடைந்த நீா் நிலைகளை போா்க்கால அடிப்படையில் உறுதியான கான்கிரீட்டால் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT