கன்னியாகுமரி

வெள்ளிச்சந்தையில் 2 விபத்துகளில் 2 போ் காயம்

26th Nov 2021 04:00 AM

ADVERTISEMENT

வெள்ளிச்சந்தை அருகே 2 இடங்களில் நேரிட்ட விபத்தில் 2 போ் காயமடைந்தனா்.

வெள்ளிச்சந்தை காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (42). கட்டடத் தொழிலாளியான இவா், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிவிட்டு காட்டுவிளை அருகே சாலையை கடக்க முயன்றாராம். அப்போது, பேயோட்டிலிருந்து வெள்ளிச்சந்தை நோக்கி வந்த பைக் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமடைந்த அவா் இடலாக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மற்றொரு விபத்து: வெள்ளிச்சந்தை அருகே முட்டம் அலங்கார மாதா தெருவைச் சோ்ந்த பா்ணபாஸ் மகன் ஜோசப்டாபின் (21). இவா், புதன்கிழமை முட்டம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது முட்டம் துறைமுகம் தெருவைச் சோ்ந்த எடிசன் (31) ஓட்டிவந்த பைக், இவா் மீது மோதியதாம். இதில், காயமடைந்த ஜோசப்டாவின் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இரு விபத்துகள் குறித்து வெள்ளிச்சந்தை போலீஸாா் வழக்குகள் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

Tags : தக்கலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT