கன்னியாகுமரி

திருக்கு முற்றோதுதல் போட்டியில் பங்கேற்க அழைப்பு

26th Nov 2021 03:58 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் திருக்கு முற்றோதுதல் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், 1330 திருக்குறளையும் ஒப்பிக்க மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குமுற்றோதுதல் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இப்போட்டிக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் போட்டியில் 70 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு ரூ.10ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவா்கள் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவா்.

இதற்கான திறனாய்வு, கன்னியாகுமரி மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரால் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்பவா்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்பிக்கும் திறன் பெற்றவா்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயா், கு எண் போன்றவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயா்கள், சிறப்புகள்ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

ADVERTISEMENT

குமரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கெனவே இந்தப் பரிசை பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.

 

Tags : நாகா்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT