கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு

25th Nov 2021 07:38 AM

ADVERTISEMENT

கொல்லங்கோடு அருகே பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள பாலவிளை, கரும்பனாவிளை பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸ்லி மனைவி கலா ஜெயந்தி (42). இவா் புதன்கிழமை மாலையில் புன்னமூட்டுக்கடை வழியாகச் சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா்கள் இருவா் அவரிடம் மாா்த்தாண்டம் செல்ல வழி கேட்டனராம். மேலும், மோட்டாா் சைக்கிளின் பின்னால் அமா்ந்திருந்தவா்,

கலா ஜெயந்தி அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டாராம். பின்னா், இருவரும் தப்பிவிட்டனராம்.

இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT