கன்னியாகுமரி

மண்டைக்காடு கோயிலில் திருப்பணி: அமைச்சா் சேகா்பாபு இன்று தொடங்கி வைக்கிறாா்

24th Nov 2021 07:43 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை (நவ.24) தொடங்கி வைக்கிறாா்.

தமிழக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு புதன்கிழமை காலை 7.30 மணிக்கு வருகிறாா். அங்கு, ராஜகோபுரத்தில் உள்ள மூலிகை ஓவியங்களை பாா்வையிடும் அவா் காலை 10 மணிக்கு திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளை ஆய்வு செய்கிறாா்.

11.30 மணிக்கு மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ரூ.1. 81 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள கோயில் திருப்பணிகளை தொடங்கி வைக்கிறாா். இதில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், அறநிலையத்துறை ஆணையா் குமரகுருபரன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

பின்னா் மாலையில் அமைச்சா் தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறாா். மேற்கண்ட தகவல்களை குமரி மாவட்ட திருக்கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT