கன்னியாகுமரி

புகைப்படக் கலைஞா்கள் நலச்சங்க செயற்குழுக் கூட்டம்

24th Nov 2021 07:40 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞா்கள் நலச்சங்க செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா், செயலா் ஜாண் முன்னிலை வகித்தாா்.

நவ.30 செவ்வாய்க்கிழமை மிரா்லெஸ் கேமரா பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும். கூட்டத்திற்கு பல ஆண்டுகளாக வராமல் இருக்கும் உறுப்பினா்களுக்கு சந்தா கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், பொருளாளா் ராஜேஷ், செயற்குழு உறுப்பினா்கள் பிஜூ, சஜு, சந்தோஷ், கிறிஸ்டோபா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT