கன்னியாகுமரி

பாலாமடம் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

24th Nov 2021 07:47 AM

ADVERTISEMENT

நித்திரவிளை அருகே பாலாமடம் பகுதியில் மழைநீா் வடிந்து செல்ல வசதியாக ரூ. 17 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மழைக்காலங்களில் நித்திரவிளை அருகே பாலாமடம், பாணம்தோப்பு, ஏலாக்கரை, பள்ளித்தோட்டம், தெக்கன்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அப்பகுதி மக்களின் கோரிக்கையையடுத்து பாலாமடம் பகுதியில் வடிகாலை அகலப்படுத்தி, பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக கான்கிரீட் சிலாப் அமைக்கும் பணிக்கு மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியிலிருந்து ரூ. 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி தொடங்கப்பட்டது.

இப் பணியை கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி, ஏழுதேசம் பேரூா் காங்கிரஸ் கட்சி தலைவா் ராஜேந்திரகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ராஜேஷ், கிள்ளியூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் விமல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT