கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம்

23rd Nov 2021 02:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கன்னியாகுமரியில் தற்காலிக கடைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினா்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவம்பா் 17 ஆம் தேதி முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை ஐயப்ப பக்தா்கள் சீசன் காலமாகும். இந்த சமயத்தில் சபரிமலைக்கு வரும் பக்தா்கள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தற்காலிக கடைகள் அமைக்கப்படும். ஆனால் கரோனா பரவல் காரணமாக ஐயப்ப பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நிகழாண்டு பேரூராட்சி சாா்பில் தற்காலிக கடைகள் ஏலம் நடைபெறவில்லை. ஆனால் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலின் வருவாயை பெருக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடற்கரைப் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடற்கரையில் கடைகள் அமைக்க அளவீடு பணிகள் நடைபெற்றன. இதற்கு கன்னியாகுமரி கடை வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில் விவேகானந்தா் கடை வியாபாரிகள் சங்கம், தேவி குமரி கடை வியாபாரிகள் சங்கம் உள்பட 6 சங்கங்கள் இணைந்து திங்கள்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் காரணமாக கன்னியாகுமரியில் 250 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT