கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு

21st Nov 2021 12:12 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து புதிய அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஓட்டுநா் தோ்வுத் தளத்துடன் கூடிய புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் சாா்பாக, புதிய அலுவலக கட்டடத்தினை பத்மநாபபுரம் உதவி ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, வ.விஜய்வசந்த் எம்.பி., ஜெ.ஜி.பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோா் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல துணைப் போக்குவரத்து ஆணையா் ர.ரஜினிகாந்த், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சி.மன்னா்மன்னன் (மாா்த்தாண்டம்), சந்திரசேகா் (நாகா்கோவில்), பப்புசன், மரியசிசுகுமாா், ஜான்பிரைட், வா்க்கீஸ், கோபால், ராபி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT