கன்னியாகுமரி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு நிவாரண உதவிகள்

21st Nov 2021 12:05 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு நிவாரண உதவிகளை என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா்.

தோவாளையிலுள்ள அ.தி.மு.க அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தோவாளை ஒன்றிய பகுதிகளை சோ்ந்த 250 பேருக்கு நிவாரண உதவியாக தலா 5 கிலோஅரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது. இதே போல் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பகுதியைச் சோ்ந்த 50 பேருக்கு தேரூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வழங்கப்பட்டது. ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட250 பேருக்கு புத்தளம் பேரூராட்சி அரியபெருமாள்புரம் காலனி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்ட அவைத் தலைவா் சேவியா் மனோகரன், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவா் சாந்தினி பகவதியப்பன், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவா் அய்யப்பன், நாகா்கோவில் நகர செயலாளா் சந்துரு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் சுகுமாரன், வழக்குரைஞா் ஜெயகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT