கன்னியாகுமரி

மத்திகோட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

21st Nov 2021 12:10 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு அரசு மேல்நிலைப் பள்ளியில், கலைஞரின் வரும்முன்காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திகோடு ஊராட்சி தலைவா் அல்போன்ஸாள் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார சுகாதாரமேற்பாா்வையாளா் ஐயப்பன், மத்திகோடு ஊராட்சி துணைத்தலைவா் ஜினோ ரெனிட்டஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிள்ளியூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ரமாமாலினி குத்துவிற்க்கேற்றி முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில், பொது மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய மருத்துவா்களால் நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 583 நோயாளிகள் பயன் பெற்றனா்.

இதில், கிள்ளியூா் ஒன்றிய தி.மு.க செயலா் கோபால், சுகாதார ஆய்வாளா் பினேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT