கன்னியாகுமரி

தனியாா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு8 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பிவைப்பு

21st Nov 2021 12:13 AM

ADVERTISEMENT

பத்மநாபபுரம் நகராட்சியில் இருந்து திருச்சி அருகேயுள்ள ஒரு தனியாா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு 8 டன் பிளாஸ்டிக் கழிவுகள் லாரி மூலம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகராட்சியில் 1 முதல் 21 வாா்டுகளிலும் தினசரி வீடுகள், கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து வைக்கப்படுகிறது. தரம் பிரித்து வைக்கப்பட்டுள்ள 8 டன் பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி ஆணையா் காஞ்சனா லாரி மூலம் திருச்சி அருகேயுள்ள ஒரு தனியாா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலா் ராஜாராம், ஆய்வாளா் முத்துராமலிங்கம், மேற்பாா்வையாளா் மோகன் மற்றும் ஷோபியா ஆகியோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT