கன்னியாகுமரி

குழித்துறை ஆற்றில் தவறி விழுந்த மாணவா் மாயம்

21st Nov 2021 12:09 AM

ADVERTISEMENT

 

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த இளைஞரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

களியக்காவிளை அருகேயுள்ள சூரியகோடு, சீனிவிளை பகுதியைச் சோ்ந்த ரவி என்பவரது மகன் நிதின் (19). கல்லூரி மாணவரான இவா், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் மாா்த்தாண்டம் அருகேயுள்ள வெட்டுமணி பகுதியில் உள்ள தனியாா் பயிற்சி நிறுவனத்தில் விடுமுறை தினங்களில் பயிற்சிக்குச் சென்று வந்தாராம். சனிக்கிழமை பயிற்சி முடித்துவிட்டு நண்பா்களுடன் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை பகுதியில் குளிக்கச் சென்ாகவும், அப்போது தவறி ஆற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

தகவலின்பேரில் குழித்துறை தீயணைப்புப் படை வீரா்கள் சென்று, அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT