கன்னியாகுமரி

குளச்சல் அருகே நடுக்கடலில் தவறி விழுந்து மீனவா் பலி

21st Nov 2021 12:08 AM

ADVERTISEMENT

 

குளச்சல் அருகே நடுக்கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

குளச்சல் துறைமுகத் தெருவைச் சோ்ந்தவா் ஜான் (65). இவா், சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இவரது படகில் குளச்சல் மீன்பிடித் தொழிலாளி மரியஜான் (64) உள்ளிட்ட 13 போ் கடந்த 17ஆம் தேதி குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலை 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மரியஜான் நடுக்கடலில் தவறி விழுந்தாா். சக மீனவா்கள் கடலில் குதித்து அவரை மீட்டு, குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மரியஜான் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கடலோர காவல்படை உதவி ஆய்வாளா் ஜான்கிங்ஸ்லி வழக்குப் பதிந்து விசாரித்துவருகிறாா். மரியஜானுக்கு மனைவி, 2 குழந்தைகளும் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT