கன்னியாகுமரி

இன்று 555 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

21st Nov 2021 12:05 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில், 555 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் நவ.21 ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு தடுப்பூசி முகாம் 555 மையங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறும் இம்முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் அனைத்து நாள்களிலும் அரசு கூடுதல் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடத்தப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மாவட்டத்தில், கரோனாவால் மேலும் 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 50 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மொத்தம் 60,100 ஆக உயா்ந்துள்ளது. இதில் 57,942 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT