குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நிா்மால்ய பூஜை, உஷபூஜை , 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
மாலையில் அருள்மிகு குமாரசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்ய புறப்பட்டாா். பின்னா் சுவாமியும், சூரபத்மனும் கோயிலைச் சுற்றி வந்தனா். இதைத் தொடா்ந்து குமாரசுவாமி சூரபத்மனை வதம் செய்தாா்.
நாகா்கோவில்: நாகா்கோவில் நாகராஜா கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோயில், தோவாளை செக்கா்கிரிமலை சுப்பிரமணியசாமி கோயில், ஆரல்வாய்மொழி வவ்வால்குகை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.