புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியில் இளைஞரை அரிவாளால் வெட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வேங்கோடு மேலவிளை பகுதியைச் சோ்ந்த சுவாமியடியான் மகன் செல்வராஜ்(42).
இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தங்கையன் மகன் டேவிட்ராஜ்(40) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மேலவிளை பகுதியில் இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த டேவிட்ராஜ், செல்வராஜை அரிவாளால் வெட்டினாராம். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்பகுதியினா் அவரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.