களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள திருத்துவபுரம், இலுப்பக்காவிளை பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் என்பவரது மகன் வில்சன். கூலித் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.