கன்னியாகுமரி

களியக்காவிளையில் ஆா்ப்பாட்டம்

10th Nov 2021 07:33 AM

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யுனைட்டெட் சாா்பில் களியக்காவிளை பேரூராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மாலைநேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரூராட்சியின் நிா்வாக முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற இப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் டி. சுலிப் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் இ. ஜாா்ஜ் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். சமூக ஆா்வலா் போஸ் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT