கன்னியாகுமரி அருகே இலந்தையடிவிளை அரசு தொடக்கப் பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான பராமரிப்புப் பணிகள் தொடங்கின. அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ். அழகேசன் பராமரிப்புப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
ஒன்றிய திமுக செயலா் என். தாமரைபாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் இங்கா்சால், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆரோக்கிய சௌமியா, பேராசிரியா் டி.சி. மகேஷ், பேரூா் செயலா் புவியூா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.