கன்னியாகுமரி

புதுக்கடை அருகே தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

9th Nov 2021 01:35 AM

ADVERTISEMENT

கருங்கல்: புதுக்கடை அருகே தொழிலாளி திங்கள்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.

புதுக்கடை அருகேயுள்ள உதச்சிக்கோட்டை கரையான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் ஸ்ரீகுமாரன் (55). இவா், கடந்த 31ஆம் தேதி தனது நண்பருடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென தரையில் தவறி விழுந்தாராம். இதில், தலையில் காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT