கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை பாலப்பள்ளம், வெள்ளியா விளை, பாலூா், மிடாலம், மேல்மிடாலம், குறும்பனை,தொழிக்கோடு, பூட்டேற்றி, திப்பிரமலை, முள்ளங்கனா விளை, எட்டணி, பள்ளியாடி, நேசா்புரம், இலவு விளை, காரான் விளை, நட்டாலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.