கன்னியாகுமரி

காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞா்கள்

5th Nov 2021 11:01 PM

ADVERTISEMENT

குளச்சல் அருகே, விஜய்வசந்த் எம்.பி. முன்னிலையில் 100 க்கும் மேற்பட்டஇளைஞா்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

குளச்சல் அருகேயுள்ள காரங்காடு பகுதியில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது காரங்காடு இளைஞா் காங்கிரஸ் யோகேஷ் தலைமையில், 100 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் காங்கிரஸில் இணைந்தனா். அவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. துண்டு அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா்ா் ராதாகிருஷ்ணன், பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் மாநில பொதுச் செயலா் டாக்டா் பினுலால் சிங், இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் லாரன்ஸ், வட்டார துணைத் தலைவா் டோமினிக், மாவட்டச் செயலா் ஆன்றனி, வட்டாரத் தலைவா் நடராஜ், துணைத் தலைவா்கள் ஜோசப், பேட்ரிக், பஞ்சாயத்து கமிட்டி தலைவா் ஜோதி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் சேவியா், ராஜன், சாா்லஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT