கன்னியாகுமரி

ஐஆா்இஎல் நிறுவனத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு

5th Nov 2021 11:09 PM

ADVERTISEMENT

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் 2021 ஆண்டிற்கான விழிப்புணா்வு காண்ணிப்பு வாரம் சுதந்திர இந்தியாவின் 75 -ஆவது வருடத்தில் ஒருமைபாட்டுடன் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் பொது மேலாளரும், ஆலை தலைவருமான என். செல்வராஜன் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலா்மேல் மங்கை ஊழல் ஒழிப்பு மற்றும் நோ்மையின் அவசியத்தை குறித்து பேசினாா். இதையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிறுவன அலுவலா்கள், பணியாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

றிகேஒய் 5 ஐஆா்இ

கண்காணிப்பு விழிப்புணா்வு வார நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசுகிறாா் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலா்மேல்மங்கை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT