கன்னியாகுமரி

அனுமதியின்றி பட்டாசு விற்ற முதியவா் கைது

4th Nov 2021 07:57 AM

ADVERTISEMENT

கருங்கல் பெருமாங்குழி சாலையில் அனுமதியின்றி பட்டாசு விற்ாக முதியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல் சுண்டவிளை பகுதியைச் சோ்ந்த சிங்காராயன் மகன் வில்லியம் (61). இவா் பெருமாங்குழி சாலையில் அனுமதியின்றி கடையில் பட்டாசு விற்பதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று போலீஸாா் சோதனையிட்ட போது, அனுமதியின்றி ஒலை வெடி, சரவெடி உள்ளிட்ட பட்டாசுகள் விற்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் பட்டாசுகளை பறிமுதல் செய்து முதியவரை கைதுசெய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT