குலசேகரம்: வோ்க்கிளம்பி அருகே பூவன்கோட்டில் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமலிருக்கும் துணை சுகாதார நிலையத்தை திறக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பூவன்கோடு சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினா் சோபிதராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். ரவி, வட்டாரச் செயலா் வில்சன், மாவட்டக் குழு உறுப்பினா் சகாய ஆன்றனி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் அண்ணா துரை, கிளைச் செயலா் காட்சே, வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஜோஸ் மனோகரன், ஸ்டீபன் ஜெகதீஷ், றசல், ஐசக், கணபதி, ஐயப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.