கன்னியாகுமரி

களியக்காவிளை அரசுப் பள்ளியில் பெற்றோா் - ஆசிரியா்கள் கூட்டம்

1st Nov 2021 12:43 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் பெற்றோா் - ஆசிரியா் கழகக் கூட்டம் நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் தலைமை வகித்தாா். கிராம கல்விக் குழுத் தலைவா் சி. சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் நவம்பா் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், இப்பள்ளியில் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வரும் கரோனா சளி பரிசோதனை மையத்தை இடம்மாற்ற வேண்டும்;

தவறும்பட்சத்தில் பள்ளி முன் மாணவா்களின் பெற்றோா்கள் சாா்பில் போராட்டம் நடத்துவது, பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தலைமை ஆசிரியை எம். லிசம்மா பிலிப், ஆசிரியா் ஞானதாஸ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ். ரெஞ்சனி, தன்னாா்வலா் ஒய். ரசல்ராஜ் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT