கன்னியாகுமரி

‘குமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

1st Nov 2021 12:42 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மறுமலா்ச்சி நாடாா் இளைஞா் பேரவையின் மாநிலத் தலைவா் த.சாலிபாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க போராடி உயிா்நீத்த தியாகிகளுக்கு நாகா்கோவிலில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான விமான நிலையம் அமைக்க வேண்டும். வரும் மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் சாா்பில் சென்னை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் நாடாா் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றாா் அவா். பேட்டியின் போது பொதுச்செயலா் சைமன் பொன்ராஜ் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT